×

நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த சோனியாவுடன் அமைச்சர்கள் பேச்சு

புதுடெல்லி: நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித்  தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தின் 17வது மக்களவையின் முதல் கூட்டம் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 26ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 5ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முதல் இரண்டு நாட்களில் புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. வரும் 19ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். முதல் கூட்டம் என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வரும் 20ம் தேதி உரையாற்றுகிறார்.  இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பல்வேறு கட்சியின் நாடாளுமன்ற தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் பிரகலாத் ஜோஷி சந்தித்து பேசினார். அவருடன் மத்திய இணையமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் உடன் சென்றனர்.  நாடாளுமன்ற கூட்டத்ெதாடர் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்திப்பது அரசு நடைமுறையாகும். இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நிகழ்ந்தது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த காங்கிரஸ் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் கேட்டுக்ெகாண்டார்.  தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத், திமுக நாடாளுமன்ற மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு  ஆகியோரையும் சந்தித்தார்.  இந்த தொடரில், மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வது மட்டுமின்றி, 10 புதிய அவசர சட்டங்களை நிறைவேற்றி சட்டங்களாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது.



Tags : Ministers ,Sonia ,parliament , Ministers , Sonia, parliament smoothly
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...