கடலூரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் 2,500 பேர் பங்கேற்பு

கடலூர்: கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வேலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர்,  கடலூர், காஞ்சிபுரம், மற்றும் புதுவையை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் வேலூர், திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களிலிருந்து 2500 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு உடற்தகுதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. நாளை கடலூர் , புதுச்சேரி மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Cuddalore ,Army , Cuddalore, Military, recruitment camp
× RELATED ரேஷன் கடை ஊழியர்களிடம் பணம் கேட்டு...