×

வாஜ்பாய் வீட்டில் குடியேறுகிறார் அமித்ஷாவிற்கு கூடுதல் பாதுகாப்பு

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு டெல்லி போலீசார் கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். அமித்ஷா முக்கிய துறையான உள்துறை அமைச்சராகியுள்ளதால் அவருக்கான பாதுகாப்பை டெல்லி போலீசார் சீரமைத்துள்ளனர். ஏற்கனவே அவருக்கு மத்திய துணை ராணுவம் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி வருகின்றது. எனினும் கூடுதலாக டெல்லி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குடியிருந்த வீட்டில் விரைவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியேறுகிறார். அங்கு தேசிய பாதுகாப்பு படையின் கருப்பு பூனை கமான்டோ பாதுகாப்பு வழங்கப்படும். அதே நேரத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கான பாதுகாப்பு பணியையும் டெல்லி போலீசார் தொடர்வார்கள்.

Tags : Vajpayee ,home , Amit Shah
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...