காங். தொழிற்சங்க பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தொழிற்சங்க பிரிவுக்கு (ஐஎன்டியுசி) புதிய நிர்வாகிகளை அகில இந்திய தலைவர் ஜி.சஞ்சீவரெட்டி அறிவித்து உள்ளார். அதன்படி, தமிழக ஐஎன்டியுசி தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.காளன் நியமிக்கப்பட்டிருக்கிறார். செயல் தலைவராக என்.தேவராஜன், பொருளாளராக வி.ஆர்.ஜெகநாதன், பொதுச்செயலாளராக ஆர்.ஆதிகேசவன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று 9 துணை தலைவர்களும், 8 செயலாளர்களும், 67 செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக ஐஎன்டியுசி இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வந்தது. அகில இந்திய தலைவர் சஞ்சீவரெட்டி இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமரசம் ஏற்படுத்தி, இந்த புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்து இருக்கிறார்.


× RELATED மக்களவையில் பாஜ வழங்க முன் வரும் துணை...