×

தமிழ் மொழியை தொட்டான் கெட்டான்: இந்தி திணிப்புக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை: தமிழ் மொழியை தொட்டான் கெட்டான் என இந்தி திணிப்புக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்களான தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தி கட்டாயம் என்று கூறி மும்மொழி கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழக மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்து, எப்போதும் தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் என்று தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மீன்வளத்துறை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட பிறகு, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரு மொழி கொள்கை தான் எங்களின் உயிர். முதல்வர், அமைச்சர்கள், பள்ளிகல்வித்துறை, என எல்லோரும் சொல்லிவிட்டோம். ஒரே நிலை இரு மொழி கொள்கை. மக்கள் விரும்பாத இந்தியை எந்த நிலையிலும் நாங்கள் விரும்ப போவதில்லை. மக்களின் கருத்துதான் எங்கள் கருத்து. 1965ல் எவ்வளவு பெரிய பிரச்னை, போராட்டத்தில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டு, பலர் உயிர்தியாகம் செய்துள்ளனர். இந்த உணர்வு எங்களிடம் உள்ளது. எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான், தமிழை தொட்டான் கெட்டான் என்று கூறினார்.

Tags : Tamil ,Jeyakumar ,Tutan Ketan , Jayakumar
× RELATED ஜெயக்குமார் மரணத்தில் கூலிப்படைக்கு...