கிளவ்ஸ் சர்ச்சை டோனிக்கு பிசிசிஐ ஆதரவு

தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த உலக கோப்பை லீக் ஆட்டத்தின்போது, இந்திய அணி விக்கெட் கீப்பர் எம்.எஸ்.டோனி அணிந்திருந்த கையுறையில் இந்திய துணை ராணுவப் படையின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததாக சர்சை எழுந்தது. இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்பதால் அடுத்து வரும் போட்டிகளில் அந்த கையுறையை தவிர்க்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூறியிருந்தது. இந்த நிலையில், டோனி தேசப்பற்றுடன் தனக்கு விருப்பமான சின்னம் பொறித்த கையுறையை அணிந்து விளையாட தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ள நிலையில், டோனி தனது கீப்பிங் கிளவ்சை மாற்றுவாரா... இல்லையா? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : BCCI ,Clive , Dhoni
× RELATED ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட்...