×

யாரும் குடியேறாத நிலையில் வாஜ்பாய் வசித்த வீட்டில் அமித்ஷா பராமரிப்பு பணிகள் துரிதம்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடைசிகாலம் வரை வசித்த வீடு ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் பதவி காலத்துக்குப் பின்னர் 2004ம் ஆண்டு முதல் மத்திய டெல்லியில் உள்ள கிருஷ்ண மேனன் பார்க் அரசு இல்லத்தில்தான் முன்னாள் பிரதமரும் மூத்த பாஜ தலைவருமான வாஜ்பாய் தங்கி இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து கடந்தாண்டு நவம்பர் மாதம்தான், மேற்கண்ட அரசு இல்லத்தை வாஜ்பாய் குடும்பத்தினர் அரசிடம் முறையாக ஒப்படைத்தனர். தற்போது அந்த இல்லத்தில் யாரும் வசிக்கவில்லை.

இருப்பினும் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த சில மாதங்களில் இந்த அரசு இல்லத்தில் உள்துறை அமைச்ச அமித்ஷா குடியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டெல்லி அக்பர் சாலையில் உள்ள 11ம் எண் இல்லத்தில் அமித்ஷா வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், வாஜ்பாய் வசித்த அரசு இல்லத்துக்கு அமித்ஷா சென்று பார்வையிட்டு வந்தார். மேலும், வாஜ்பாய் வாழ்ந்த அரசு இல்ல பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அந்த இல்லத்தில் அமித்ஷா குடியேறக் கூடும் என கூறப்படுகிறது.


Tags : house ,Amit Shah ,no one ,Vajpayee , Amit Shah, Atal Bihari, Vajpayee, bungalow
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...