முதல்வர் விழாவில் அதிமுகவினர் ரகளை; சேலத்தில் பரபரப்பு

சேலம்: சேலத்தில் முதல்வர் பங்கேற்ற விழாவில் அதிமுகவினர் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ரூ.441 ேகாடியில் கட்டப்பட்டுள்ள ஏவிஆர் ரவுண்டானா-ராமகிருஷ்ணாரோடு பாலத்தின் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பாலத்தை திறந்து வைத்தார். இதற்கான விழா மேடை பாலம் அருகே அமைக்கப்பட்டிருந்தது. திறப்பு விழா 9மணிக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திமுகவை சேர்ந்த சேலம் எம்பி பார்த்திபன், வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் 8.30மணிக்கு மேடையருகே வந்தனர்.

அவர்களுடன் திமுக முக்கிய நிர்வாகிகளும் வந்தனர். அனைவரும் மேடை முன்பு போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். இதே போல் அதிமுக எம்எல்ஏக்களான சக்திவேல், வெற்றிவேல், சின்னத்தம்பி உள்ளிட்டோரும் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். அதே நேரத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர், அரை மணிநேரம் தாமதமாக 9மணிக்கு விழா நடக்கும் இடத்திற்கு வந்தனர். அதோடு மேடைக்கு முன்புறத்தில் செல்ல முயற்சித்தனர். இருக்ைகள் எதுவும் காலியாக இல்ைல. எனவே உங்களை அனுமதிக்க முடியாது என்று போலீசார் கூறினர்.

ஆனால் அதிமுகவினர் இதை பொருட்படுத்தாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு அங்கு வைக்கப்பட்டிருந்து தடுப்பு வேலிகளை தாண்டி, வலுக்கட்டாயமாக முன்பகுதிக்கு சென்றனர். அதோடு முன்புறத்தில் அமர்ந்திருந்த திமுக நிர்வாகிகளை மறைப்பது போல், நின்று ெகாண்டு பலத்த கூச்சலிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே ேவண்டுமென்றே பிரச்சினையை உருவாக்கும் அதிமுகவினரை இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள் என்று திமுகவினர் போலீசாரிடம் தெரிவித்தனர். அப்போது இது தொடர்பாக இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.

× RELATED சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில்...