துணை ராணுவ படையின் சின்னம் பொறித்த கையுறையை தோனி பயன்படுத்த ஐ.சி.சி.க்கு பி.சி.சி.ஐ. கோரிக்கை

லண்டன்: தோனி கையுறை பிரச்சினை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. அதில் துணை ராணுவ படையின் சின்னம் பொறித்த கையுறையை தோனி பயன்படுத்த அனுமதிக்குமாறு பி.சி.சி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் துணை ராணுவ சிறப்புப் படையின் முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்த வேண்டாம் என்று தோனிக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த போட்டியில் தோனி கீப்பிங் செய்த போது, அணிந்திருந்த கையுறையில் இந்திய துணை ராணுவ சிறப்புப் படையின் முத்திரை பதிக்கப்பட்டு இருந்தது. இந்த முத்திரையின் அர்த்தம் தியாகம் என்பதாகும். இந்த புகைப்படம் தோனியின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலானது. இந்நிலையில் ராணுவ முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்த வேண்டாம் என பிசிசிஐக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.

ஐசிசி விதிகளின்படி ஐசிசி உபகரணங்கள் மற்றும் ஆடை ஆகியவற்றில் அரசியல், சமய, இனவாத, தேசியவாத முத்திரைகள் அல்லது குறியீடுகள் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி இல்லை. எனவே ராணுவம் முத்திரைப் படுத்த கையுறையை தோனி பயன்படுத்த வேண்டாம் என்றும் அந்த முத்திரையை அகற்றுமாறு பிசிசிஐயிடம் ஐசிசி வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் தோனி கையுறை பிரச்சினை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. அதில் துணை ராணுவ படையின் சின்னம் பொறித்த கையுறையை தோனி பயன்படுத்த அனுமதிக்குமாறு பி.சி.சி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.


Tags : Dhoni ,ICC , India, cricket, Dhoni, glove, Klaus, BCCI, ICC, Paramilitary icon,
× RELATED வங்கதேச கேப்டன் ஷாகிப் ஹசனுக்கு 2 ஆண்டு தடை: ஐசிசி அதிரடி நடவடிக்கை