×

ரூ.10,000 கடன் பிரச்சனையால் 2 வயது பெண் குழந்தை கொடூர கொலை...: நாட்டையே உலுக்கியுள்ள அதிர்ச்சி சம்பவம்!

அல்கார்: 10,000 ரூபாய் கடன் பிரச்சனை காரணமாக 2 வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவருக்கு டுவிங்கிள் சர்மா எனும் இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த மே மாதம் 31ம் தேதி டுவிங்கிள் மாயமாகியுள்ளார். குழந்தை மாயமானதும் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். குழந்தை கடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அலிகார் மாவட்டத்தின் டாப்பல் டவுன் என்ற இடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில் பெண் குழந்தையின் உடல் கடந்த ஞாயிறன்று மீட்கப்பட்டது. அது, காணாமல் போன இரண்டரை வயது பெண் டுவிங்கிள் சர்மாவின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் இறங்கிய போலீசார் ஜாகித், அஸ்லாம் ஆகியோரை கைது செய்தனர். குழந்தையின் தந்தையிடம் கொடுத்த கடனை கேட்டபோது, குழந்தையின் பாட்டனார் மிரட்டியதால் ஆத்திரத்தில் குழந்தையை கடத்தி கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடன் பிரச்சனையில் இரண்டரை வயது குழந்தை கொல்லப்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வரைலாகியுள்ளது. இதையடுத்து கொலை குறித்து உத்தரப்பிரதேச அரசிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள விசாரணை அதிகாரிகள், கொலை நடந்து ஒரு வாரம் கடந்திருப்பதால் உடல் பாகங்கள் அழுகிவிட்டதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் குழந்தை காணாமல் போன வழக்கை அலட்சியமாக அணுகிய 5 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே குற்றவாளிகளுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகிக்க உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிறுமிக்கு சமூக வலைதளங்களில் நியாயம் கேட்டு பல்வேறு தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். மேலும் #JusticeForTwinkle எனும் ஹேஷ்டாக் வைரலாகியுள்ளது.


Tags : country ,incident , Aligarh,twinkle Sharma,Murder,Loan,UP
× RELATED திருச்சியில் 14 வயது சிறுமியின் மர்ம...