நெல்லையில் நடந்த சமூக பிரச்சனையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கு: விசாரணையை தொடர ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை: நெல்லையில் சமூக பிரச்சனையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் விசாரணையை தொடரலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இது தொடர்பாக இறுதி அறிக்கையை தாக்கல் செய்யக்கூடாது என நெல்லை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விவசாரணை தொடர்பாக நெல்லை எஸ்பி ஜூன் 13ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் முனீர்பள்ளத்தில் இரு தரப்பு பிரச்சனையில் கடந்த பிப்.25ல் இளைஞர் ராஜாமணி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் விசாரணை முறையாக நடைபெறவிலை எனவும், வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரியும் இளைஞரின் தந்தை வழக்கு தொடர்ந்தார்.


× RELATED லால்குடி அருகே டாஸ்மாக் காவலாளி கொலை வழக்கில் 3 வாலிபர் கைது