டெல்லியில் உள்ள சேவா பவனில் காவிரி ஒழுங்காற்று குழுக்கூட்டம் தொடங்கியது

புதுடெல்லி: டெல்லியில் உள்ள சேவா பவனில் காவிரி ஒழுங்காற்று குழுக்கூட்டம் தொடங்கியது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் செல்வராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  காவிரி நீர் இருப்பு மற்றும் அணை பராமரிப்பு உள்ளிட்ட விவாகரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி நீரை திறக்க ஏற்கனவே மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.


× RELATED டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்