×

புதுக்கோட்டை வங்கியில் 14 கிலோ நகைகள் கொள்ளைபோன விவகாரம் : 4 வங்கி அதிகாரிகள் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகைகள் கொள்ளைபோன விவகாரத்தில் மேலாளர் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையின்போது பணியிலிருந்த 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து வங்கியின் திருச்சி மண்டல அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 கிலோ தங்க நகைகள் கொள்ளை

கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதியன்று புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.3 கோடி மதிப்பிலான 14 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இந்த நிலையில் அதே வங்கியில் அலுவலக உதவியாளராக இருந்த மாரிமுத்து என்பவர் கோரியக்கரை கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக கடந்த 15 ஆண்டுகளாக மாரிமுத்து (42).பணியாற்றி வந்தார்.

மாரிமுத்து உறவினர்களின் பெயர்களில் 5 கிலோ தங்கம் அடகு வைக்கப்பட்டது உறுதி

இதையடுத்து வங்கி நிர்வாகத்தின் சார்பில், 13¾ கிலோ தங்க நகைகளை காணவில்லை என்றும், அவை மாயமானதில் மாரிமுத்துவுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை டவுன் போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த காவல் துறையினர் மாரிமுத்து அவரது உறவினர்களின் பெயர்களில் 5 கிலோ தங்கம் பல்வேறு இடங்களில் அடகு வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக போலீசார் பலரை விசாரணை செய்து வருகின்றனர்.

 4 வங்கி அதிகாரிகள் பணியிடை நீக்கம்

இந்நிலையில் இந்த கொள்ளையின்போது பணியிலிருந்த மேலாளர் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து வங்கியின் திருச்சி மண்டல அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கி மேலாளர் மாரீஸ் கண்ணன், காசாளர் ரங்கசாமி, ஊழியர்கள் கோபி கண்ணன், வெங்கடேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : bank ,Pudukottai , Banking, officers, workshop, removal, pudukottai
× RELATED தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து...