எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,264 கோடி வழங்க ஒப்புதலாகி உள்ளது என்றும் பணியில் எந்தத் தொய்வும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இதுவரை நிலம்  ஒப்படைக்கவில்லை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


× RELATED மானாமதுரை பயணிகளுக்கு இடம்...