முத்திரை பதித்த கையுறையை எம்.எஸ்.தோனி பயன்படுத்தலாம்: பிசிசிஐ நிர்வாக குழுத்தலைவர் அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் துணை ராணுவ சிறப்புப் படையின் முத்திரை பதித்த கையுறையை எம்.எஸ்.தோனி தொடர்ந்து பயன்படுத்தலாம் என பிசிசிஐ நிர்வாக குழுத்தலைவர் வினோத் ராய் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தோனியின் கையுறையில் இருப்பது துணை ராணுவ சிறப்புப் படையின் முத்திரை அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, தோனி முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்த ஐசிசி- இடம் கோரிக்கை வைத்துள்ளது. முன்னதாக, இந்தியாவின் துணை ராணுவ சிறப்புப் படையின் முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்த வேண்டாம் என்று தோனிக்கு  ஐசிசி எச்சரிக்கை விடுத்திருந்தது.


Tags : Dhoni ,Executive Committee Announcement ,BCCI , Glove, MS Dhoni, BCCI
× RELATED இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி...