×

ராணுவ முத்திரையை பதித்த கையுறையை தோனி பயன்படுத்த வேண்டாம் : பிசிசிஐயிடம் ஐசிசி வலியுறுத்தல்

லண்டன் : இந்தியாவின் துணை ராணுவ சிறப்புப் படையின் முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்த வேண்டாம் என்று தோனிக்கு  ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்க்கு எதிரான ஆட்டத்தில் தோனி கீப்பிங் செய்த போது, அணிந்திருந்த கையுறையில் இந்திய துணை ராணுவ சிறப்புப் படையின் முத்திரை பதிக்கப்பட்டு இருந்தது. இந்த முத்திரையில் அர்த்தம் தியாகம் என்பதாகும். இந்த புகைப்படம் தோனியின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலானது.

இந்நிலையில் ராணுவ முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்த வேண்டாம் என பிசிசிஐக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது. ஐசிசி விதிகளின்படி ஐசிசி உபகரணங்கள் மற்றும் ஆடை ஆகியவற்றில் அரசியல், சமய, இனவாத, தேசியவாத முத்திரைகள் அல்லது குறியீடுகள் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி இல்லை. எனவே ராணுவம் முத்திரைப் படுத்த கையுறையை தோனி பயன்படுத்த வேண்டாம் என்றும் அந்த முத்திரையை அகற்றுமாறு பிசிசிஐயிடம் ஐசிசி வலியுறுத்தி உள்ளது.

இதனிடையே தோனியின் செயல் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தானின் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவட் செளத்திரி, தோனி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாடதான் சென்றுள்ளார் என்றும் அவர் மகாபாரத போருக்கு அல்ல என்றும் விமர்சித்துள்ளார். மேலும் தேவையில்லாத விவாதங்களை சில இந்திய மீடியாக்கள் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Dhoni ,BCCI ,ICC , Glove, Dhoni, Keeping, ICC, Warning, BCCI
× RELATED தோனியை விட சிஎஸ்கேக்கு இந்த ஆண்டு...