அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவராக இந்தியர் தேர்வு

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை தலைவராக இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் பிரமிளா ஜெயபால் (51) எம்.பி.யாக உள்ளார். அமெரிக்க குடியுரிமை பெற்றவர் இவர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய - அமெரிக்க பெண் இவர் தான். அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன் மூலம் அமெரிக்க  நாடாளுமன்றத்தின் பிரநிதிகள் சபையின் தலைவர் இருக்கையில் அமர்ந்த முதல் தெற்கு ஆசிய பெண் என்கிற பெருமையை அடைந்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரமிளா ஜெயபால்; அமெரிக்க பார்லிமென்ட் பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளது எனக்கு பெருமையாக உள்ளது. மதிப்புக்குரிய இந்த பொறுப்பை ஏற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


Tags : India ,President ,House of Representatives ,US , Pramila Jayapal becomes first South Asian American woman to preside over US House
× RELATED இந்தியா-சீனா இடையே இருதரப்பு...