அதல பாதாளத்தில் விழுந்த பங்குச்சந்தை

மும்பை: பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. தேசிய பங்குச்சந்தை 554 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. இந்திய பங்குச்சந்தைகள் நேற்று காலையிலேயே சரிவுடன் துவங்கின. மதியத்துக்கு மேல் கடும் சரிவை சந்தித்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக இடையில் 40,159.26 என்ற உச்சத்தை தொட்டாலும், வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 553.82 புள்ளி சரிந்து 39,529.72 புள்ளிகளாக இருந்தது.
இதுபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 177.9 புள்ளிகள் சரிந்து 11,843.75 புள்ளிகளாக இருந்தது.

ரிசர்வ் வங்கி தொடர்ந்து 3வது முறையாக நேற்று குறுகிய கால கடன் வட்டியை கால் சதவீதம் குறைத்தது. அதோடு, வங்கி சாரா நிதி துறையில் மேம்பாடுகளை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நிதி நிலைப்பாடு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இருப்பினும், ரிசர்வ் வங்கி எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்க முதலீட்டாளர்கள் முடிவு செய்தனர். இதனால், வங்கிப்பங்குகள் சரிவடைந்தன. ஸ்டீல், ஆட்டோமொபைல் பங்குகளும் சரிந்தன.

Tags : The bottomless, fallen, stock exchange
× RELATED பங்கு சந்தையில் நஷ்டம் முதலீட்டாளர் தற்கொலை முயற்சி