×

சுற்றுச்சூழல் மாசு தடுப்பில் அக்கறையில்லை இந்தியா, சீனா, ரஷ்யா மீது அமெரிக்க அதிபர் பாய்ச்சல்

வாஷிங்டன்: உலக அளவில் மாசு தொடர்பான பாதிப்புகள் அதிகமாகி வரும் நிலையில், இந்த விஷயத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் போதுமான அக்கறை காட்டவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது மனைவியுடன் கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து பேசினார். இந்த பயணத்தின்போது அந்நாட்டு தனியார் டிவி ஒன்றுக்கு டிரம்ப் பேட்டி அளித்தார். அதில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அதிபர் டிரம்ப் கூறியதாவது: சுற்றுச்சூழலில் அமெரிக்கா தெளிவாக உள்ளது. ஆனால், மாசு கட்டுப்பாடு விஷயத்தில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் அக்கறை காட்டவில்லை. இதுபோன்ற நாடுகளில் நல்ல காற்று, தண்ணீர் இல்லை. இவ்வாறு டிரம்ப் கூறினார்.

Tags : Barack Obama ,US ,China ,Russia , Environmental pollution, India, China, Russia, US President
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...