×

இன்று தொடங்குகிறது உலக கோப்பை பெண்கள் கால்பந்து

பாரிஸ்: பெண்களுக்கான 8வது உலக கோப்பை கால்பநது போட்டி இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தொடங்குகிறது. ஆண்களுக்கான உலக கோப்பை கால்பந்து  போட்டி போல் 1991ம் ஆண்டு முதல் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைப்பெற்று வருகிறது. இப்போது 8வது  கால்பந்து போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் சீனா, ஜப்பான், கொரிய குடியரசு, தாய்லாந்து ஆகியவை மட்டும் ஆசிய நாடுகள். இதில்  ஜப்பான்  2011ல் உலக கோப்பையை வென்றுள்ளது. இவை தவிர அமெரிக்கா 3 முறையும், ஜெர்மனி 2 முறையும், நார்வே ஒருமுறையும் உலக கோப்பையை வென்றுள்ளன. நடப்பு சாம்பியனான  அமெரிக்கா இந்த முறை எப்-பிரிவில் இடம் பெற்றுளளது. இந்த உலக கோப்பையின் லீக் போட்டிகள் ஜூன் 7ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரையிலும்,  நாக் அவுட் சுற்றான தகுதி-16 சுற்று ஜூன் 22ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரையிலும், காலிறுதிச் சுற்று ஜூன் 27, 28, 29 தேதிகளிலும் நடைபெறும். அரையிறுதி போட்டிகள்  ஜூலை 2, 3 தேதிகளிலும், இறுதிப்போட்டி ஜூலை 7ம் தேதியும் நடைபெற உள்ளன. ஆண்கள் கால்பந்து போட்டியை போன்றே பெண்கள் கால்பந்து போட்டிக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. அதனால்தான்  போட்டிக்கான பெரும்பான்மையான டிக்கெட்கள் டிசம்பர் மாதமே விற்று தீர்ந்து விட்டன. எஞ்சிய டிக்கெட்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் விற்றன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 8வது பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் பிரான்சு- கொரிய குடியரசு நாடுகள் இன்று மோத உள்ளன.

Tags : women ,World Cup , Begins, World Cup, Women's Football
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது