×

பூங்கா இடத்தில் கட்டுமான பணி நலச்சங்க நிர்வாகிகள் முற்றுகை

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி நலச்சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆதம்பாக்கம், கேசரி நகரில் பூங்காவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்காக சிலர் நேற்று பூமி பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து அப்பகுதி நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் அப்பகுதியை முற்றுகையிட்டு பூமி பூஜை பணிகளை தடுத்தனர். தகவலறிந்து ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நலச்சங்க நிர்வாகிகள், இப்பூங்கா இடம் சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக தற்போது இங்கு பூமிபூஜை நடக்கவுள்ளது. இதை தடுக்க வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து அங்கு பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘பிரச்னைக்குரிய இடம் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிலமா?, அல்லது தனியாருக்கு சொந்தமானதா? என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

Tags : Siege ,construction work welfare administrators ,park area , Park, construction work, wellness executives, siege
× RELATED தாசில்தார் அலுவலகம் முற்றுகை