×

அண்மையில் நடத்தப்பட்ட 7 தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி ஆபிசில் சான்று சரிபார்ப்பு, நேர்காணல் நடக்கிறது: அதிகாரிகள் தகவல்

சென்னை: அண்மையில் நடத்தப்பட்ட 7 தேர்வுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015-2016, 2017-2018ம் ஆண்டுக்கான தமிழ்நாடு கூட்டுறவு சார்நிலை பணிகளில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு  ஆய்வாளர் பதவியில் காலியாக உள்ள 30 பணியிடத்துக்கு எழுத்து தேர்வை கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி நடத்தியது.

இத்தேர்வில் 1,0,109 பேர் கலந்து கொண்டனர். இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 70 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையம் வழியாக வருகிற 17ம் தேதி முதல் 24ம் தேதிக்குள்  பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2016-2017ம் ஆண்டுக்களுக்கான தமிழ்நாடு அமைச்சக பணிகளுக்கு தொழில் (மற்றும்) வணிகத் துறைக்கான விலை மதிப்பீட்டு உதவியாளர் பதவியில் 1 இடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் 3 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்காணல் வருகிற 18ம் தேதி நடைபெறும். அதே போல் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலை பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவியில் 6 இடத்துக்கான தேர்வில், 16 பேரும். தமிழ்நாடு மீன் வளத்துறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய மீன்வள உதவி ஆய்வாளர் பதவியில் 6 இடத்துக்கான தேர்வில், 12 பேரும்.

தமிழ்நாடு கருவூல மற்றும் கணக்குத்துறையின் கணக்கு அலுவலர்(கிரேடு3) பதவியில் 4 இடத்துக்கான தேர்வில், 17 பேரும். தமிழ்நாடு அமைச்சக பணிகளுக்கு தொழில் மற்றும் வணிகத்துறைக்கான ரசாயனர் மற்றும் இளநிலை ரசாயனர் பதவியில் 2 இடத்துக்கான தேர்வில், 6 பேரும். தமிழ்நாடு சமூக பாதுகாப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய சமூக பாதுகப்பு துறையின் சீர்திருத்தப் பள்ளிகள் மற்றும் விழிப்புப்பணி நிறுவனங்களுக்கான உதவி கண்காணிப்பாளர் பதவியில் 4 இடத்துக்கான தேர்வில் 11 பேரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையம் வழியாக வருகிற 17ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : DNPCC Office , Recently conducted, 7 exam, TNPCC, Certification Verification, Interview
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...