×

போலி பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கம்: கிட்னி மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை

ஈரோடு: ஈரோடு கிட்னி மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு சம்பத்நகரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை பெயரில் மர்மநபர்கள் பேஸ் புக் அக்கவுண்ட் துவக்கி அதில்,  கிட்னியை விற்றால் ரூ.3 கோடி தருவதாகவும், அதற்கு ரூ.7,500 முதல் ரூ.15 ஆயிரம் வரை முன் பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். இதை நம்பி சிலர் கிட்னியை விற்க விருப்பம் தெரிவித்து, மர்மநபர்கள் தெரிவித்திருந்த  வங்கி கணக்கில் முன்பணம் செலுத்தினர்.

இதற்கிடையில் ஒரு சிலர், சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு போன் செய்து, கிட்னியை விற்பதற்கு உண்டான வழிமுறைகளை கேட்க, அப்போது தான் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நடந்த சம்பவம் தெரியவந்தது. மேலும், இதுபோல் பலர் பல  லட்சம் ரூபாயை முன் பணம் செலுத்தி ஏமாந்துள்ளதாக தொடர்ந்து மருத்துவமனைக்கு புகார் வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலியான பேஸ் புக் அக்கவுண்ட்டை சைபர் கிரைம் போலீசார் முடக்கினர். பேஸ் புக் அக்கவுண்ட்டை போலீசார் தொடர்ந்து டிரேஸ் பன்ன முயன்றபோது, அந்த அக்கவுண்ட் கர்நாடகா மாநிலம் பெங்களூரு  பகுதியில் துவக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த முகவரியும் போலியானது என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், `போலி பேஸ் புக் அக்கவுண்ட் முடக்கப்பட்டு  விட்டது. இருப்பினும், மோசடியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்’ என்றனர்.

Tags : Facebook
× RELATED அரும்பாக்கம் பகுதியில் குட்கா...