×

ஜிஎஸ்டி கணக்கு சமர்ப்பிக்க சென்னை, கோவையில் இலவச சேவை மையம்

சென்னை: வணிகவரித்துறை ஆணையர் சோமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக வணிகவரித்துறையில் மின்னணு முறையில் நமூனாக்கள் சமர்ப்பிக்க உதவுவதற்காக சென்னையிலும் கோவையிலும், இலவச சேவை மையம்  துவங்கப்பட்டுள்ளது.வரி செலுத்துவோர்கள், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இணையத்தில் தாங்கள் சமர்ப்பிக்க வேண்டிய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பான மாதாந்திர நமூனாக்கள் மற்றும் இதர மின்னணு மனுக்களை  சமர்ப்பிக்க இந்த சேவை மையத்தின் உதவியை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

வணிகவரித்துறை கணினி மையம், 4வது மாடி, பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவுக்கட்டிடம், கிரீம்ஸ் சாலை, சென்னை - 600005, தொலைபேசி எண் - 044 28295194, வணிகவரித்துறை கணினி மையம், வணிகவரித்துறை கட்டிடம்,  டாக்டர் பாலசுந்தரம் சாலை, கோவை - 641018, தொலைபேசி எண் - 0422 2247645.

Tags : service center , GST
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...