×

மெரினா கடற்கரையில் போராட்டம், கூட்டத்திற்கு அனுமதியில்லை

சென்னை: மெரினா கடற்கரையில் போராட்டங்களோ, பொதுக்கூட்டங்களோ நடத்த கூடாது என்ற உத்தரவை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மெரினாவில் போராட்டங்களை அனுமதிக்க கூடாது  என உத்தரவிட கோரி, சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், மத்திய, மாநில அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், சங்கங்கள், சில அமைப்புகள்  மெரினா கடற்கரையை தேர்வு செய்கின்றன. இவ்வாறு நடத்தப்படும் போராட்டங்களால் போக்குவரத்து மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, மெரினாவில் போராட்டங்கள் நடத்த தடை விதித்து கடந்தாண்டு செப்டம்பர் 3ம் தேதி பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் பின்பற்ற  வேண்டும். மேலும், தற்போது மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதற்கான எந்த ஆதாரங்களையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று  உத்தரவிட்டனர்.

Tags : fight ,coast ,Marina ,meeting , Marina
× RELATED நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்...