×

டெல்லி, மும்பை, கொல்கத்தாவைவிட சென்னையில் காற்று மாசு குறைவு

சென்னை: டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களைவிட சென்னையில் காற்றுமாசு குறைந்தே காணப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் உள்ள பெரு  நகரங்களில் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்றவைகளை விட சென்னை மாநகரின் காற்று மாசுப்பாடு குறைந்தே காணப்படுகிறது. காற்றுமாசுபாட்டை கண்டறிய தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய தேசிய  காற்று தர ஆய்வு திட்டத்தின் கீழ் 8 இடங்களில் காற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு காற்று மாசுகளான கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, நுண்துகள் 10 மைக்ரான் மற்றும் 2.5 மைக்ரான் ஆகியன அளவிடப்பட்டு வருகின்றன.

இத்தகைய கண்காணிப்பின்படி சென்னை நகரில் கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியன ஆண்டு சராசரி அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு உட்பட காணப்படுகின்றன. பெரும்பாலும் சென்னை நகரில் பெருகிவரும்  வாகனங்களால் வெளியிடப்பட்டு புகை மற்றும் வளர்ச்சி திட்டங்களின்பால் நடைபெறும் கட்டுமான பணிகள் ஆகியன மற்றும் சாலைகளில் வாகன மற்றும் பாதசாரிகளின் பயன்பாட்டால் மறு சுழற்சியினால் ஏற்படும் துகள்மாசுகள் முக்கிய  காரணங்களாகும். வாகனப்புகையை கட்டுப்படுத்த தமிழக அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அவற்றில் குறிப்பாக பாரத் நிலை -IV தர அளவுக்குட்பட்ட வாகனங்கடள மட்டுமே  தமிழகமெங்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பென்சீன் குறைக்கப்பட்ட (1%), கந்தகம் குறைக்கப்பட்ட டீசல் மட்டுமே சென்னை மற்றும் தமிழகமெங்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை நகரில் புதிதாக டீசல் ஆட்டோக்கள் பதிவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக  உரிமம் வழங்க/புதுப்பிக்க ஆட்டோக்கள் திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்குவதற்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. 15 ஆண்டிற்கு மேற்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் பசுமை வரி விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Delhi ,Kolkata ,Mumbai , Air pollution
× RELATED புழல் பகுதியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்: போக்குவரத்து நெரிசல்