×

எஸ்எஸ்சி கேள்வித்தாள் கசிந்த விவகாரம் 3 பேரை கைது செய்தது சிபிஐ

புதுடெல்லி: எஸ்எஸ்சி கேள்வித்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) பட்டதாரிகள் அளவிலான பணியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை கடந்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி நடத்தியது. தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக அதற்கான கேள்வித்தாளும் கீஆன்சரும் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதில் கேள்வித்தாளை அச்சிட்டு வழங்கும் சிபி தொழில்நுட்ப நிறுவனத்தின் 10 ஊழியர்களும் அடங்குவர். இது தொடர்பாக டெல்லி மற்றும் காஜியாபாத்தில் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கேள்வித்தாளை கசியவிட்ட விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட அக்‌ஷய் குமார் மாலிக், சந்திப் மாத்தூர், தர்மேந்திரா ஆகிய 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. அவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

Tags : CBI ,persons , SSC Questionnaire, Leaked, Affair, CPI
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...