×

தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் 46 ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு: ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் இருந்து 46 ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என, ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு கூறினார். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் ரயில்வே டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 46 ரயில் நிலையங்களில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு உணவு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கி முதியோர் இல்லங்கள் மற்றும் அரசு மறுவாழ்வு மையங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் அரசு இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதில், 11 பேர் பெண்கள். மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு, 2500க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். அதில், 600 பேரின் அடையாளம் இன்று வரை தெரியவில்லை. இதை தடுக்கவே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பெற்றோர்களை பாதுகாக்காத பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படும். ரயில் நிலையங்களில், சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை அவரவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கவே முயற்சித்து வருகிறோம். உறவினர்கள் ஏற்க முடியாது, என்றால் மட்டுமே அரசு இல்லங்களில் தங்க வைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : residents ,Tamil Nadu , Tamil Nadu, Railway Station, Orphanage, Mental Health, Recovery
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...