×

தஞ்சை, கரூர், திருச்சியில் கனமழை கொட்டியது: கேரளாவில் தென்மேற்கு பருவமழை 8ம் தேதி தொடங்கும்

திருச்சி: கேரளாவில் தென் மேற்கு பருவமழை 8ம்  தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தஞ்சை, கரூர், திருச்சி உள்பட பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. கோடை காலம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து தமிழகத்தில் வெயிலின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதிகபட்சமாக தமிழகத்தில் 114 டிகிரி வரை சென்ற வெயில் தற்போது படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது.  அதிக இடங்களில் 108 டிகிரி வரை கொளுத்தி வந்த வெயில், தற்போது ஒருசில இடங்களில் மட்டுமே 106 டிகிரி வெயில் நிலவியது. அதன்படி திருத்தணி, திருச்சியில் 106 டிகிரி வெயில் நிலவியது.  வெயிலின் தாக்கம் குறைந்து வரும் அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக இடியுடன்கூடிய மழை பெய்துள்ளது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று அதிகாலை சூறைக்காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 2 மணி நேரம் தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை ஏற்பட்டது. கரூரில் நேற்று மாலை 7 மணியளவில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, தொடர்ந்து மின்னலுடன் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. அரை மணி நேரம் பெய்த இந்த பலத்தமழையால், தாந்தோணிமலை உட்பட தாழ்வான பகுதிகளில் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து பல பகுதிகளில் தேங்கியது. அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென்று வானில் கருமேகம் சூழ்ந்து இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

மேலும் விடிய விடிய மிதமான மழை பெய்து கொண்டிருந்து. பெரம்பலூரில் நேற்று மாலை 4 மணியிலிருந்து அரைமணி நேரம் லேசான தூறல் இருந்தது. திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழை இல்லை. திருச்சியில் சோழன்நகர், ராம்ஜிநகர், தீரன்நகர், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சிறிது நேரம் வீசிய காற்றால் சாந்தபுரம் பகுதியில் மின்கம்பம் சாலையில் முறிந்து விழுந்தது. பிராட்டியூர், இனியானூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் கம்பங்கள் சேதமடைந்தன. திருச்சி-திண்டுக்கல் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடப்பட்டு, ஓரளவு வளர்ந்த புளிய மரக்கன்றுகள் சாய்ந்தன. சாய்ந்த மரக்கன்றுகளை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர்.

 குண்டூர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதை பலரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்து, தங்களது மொபைல்போனில் வீடியோ, போட்டோ எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக ஏற்காடு, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் 70 மிமீ,


Tags : Thanjavur ,floods ,Karur ,Trichy ,Kerala , Thanjai, Karur, Trichy, Heavy rain
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...