மானூர் பஜாரில் விபத்தை தடுக்க பேரிகார்டு அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மானூர்: மானூர் பஜாரில் உள்ள சங்கரன்கோவில் சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது. மானூர் பஜாரில் தாலுகா அலுவலகம், ஒன்றிய  அலுவலகம், காவல்நிலையம், வங்கிகள் போன்ற அலுவலகங்களும் கடைகளும் உள்ளதால் சுற்றியுள்ள கிராமத்தினர் 1000க்கும் மேற்பட்டோர் தினமும் மானூர் வந்து செல்கின்றனர். அங்குள்ள பஜாரில் நடந்து செல்வோர் சாலையை கடப்பதற்கு குறைந்தது 5 நிமிடம் காத்திருந்து மிக கவனத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.  வயோதியர்களும், சிறுவர்களும் கடந்து செல்லும் போது விபத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் விபத்தை தடுக்கும் பொருட்டும் மானூர் பஜாரில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் பொருட்டு பேரிகார்டு அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,Manoor Bazar , Manor Bazar, Barcards, public expectation
× RELATED விபத்து ஏற்படுவதை தடுக்க நெடுஞ்சாலை...