×

தென்தாமரைகுளம் அருகே 50 ஏக்கர் விவசாயம் பாதிப்பு

தென்தாமரைகுளம்: தென்தாமரைகுளம் பகுதியில் உள்ள வடக்குதாமரைகுளம், பள்ளகுளம், கரும்பாட்டூர்குளம், வால்குளம், கவக்குளம், அச்சங்குளம், புன்னேரிகுளம் உள்பட பல்வேறு குளங்கள்  வறண்டு காணப்படுகின்றன. இதனால் பொது மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குளங்களில் தண்ணீர் இல்லாததால் அந்த பகுதியில் உள்ள சுமார் 50 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு  உள்ளது. இது ஒருபுறம் இருக்க சாமிதோப்பு அய்யா வைகுண்டரின்  தலைமைப்பதியில் வைகாசி திருவிழா சமீபத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு  மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோடையின் வறட்சி காரணமாக மாவட்டத்தின்  அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுவதை அறிந்ததே.

இருந்த போதிலும் தென்தாமரைகுளத்தை அடுத்துள்ள செட்டிவிளையில் உள்ள   பூலாங்குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் திருவிழாவுக்கு  வந்த பக்தர்கள் உற்சாகம் அடைந்தனர். குடும்பமாக இந்த குளத்தில் குளித்து மகிழ்ந்தனர். கடந்த  வருடத்துக்கு முன்பு இந்த குளத்தின் மைய பகுதியில் பல அடி ஆழத்துக்கு வண்டல் மண்  எடுக்கப்பட்டது. இந்த மண் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. வண்டல்  மண் எடுக்கப்பட்டதால் குளத்தின் மைய பகுதியில் பல அடி ஆழத்துக்கு  பள்ளங்கள் உருவாகின. ஆகவேதான் இந்த குளத்தில் தற்போது வரையிலும்  தண்ணீர் தேங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது. இதை பயன்படுத்தி சிறுவர்கள்  கோடை விடுமுறையில் நீச்சல் பயிற்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Thenmalaarikulam , Tondamarikulam, agriculture impact
× RELATED தென்தாமரைகுளம் அருகே புதர் மண்டிய காவலர் குடியிருப்பு