×

உலகிலேயே அமெரிக்கா தான் தூய்மையான நாடு: இந்தியாவிற்கு தூய்மை பற்றி அக்கறை இல்லை...அதிபர் டிரம்ப் விமர்சனம்

லண்டன்: உலகின் பருவநிலை மாற்றங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார். கார்பன்-டை-ஆக்சைடை அதிகளவு வெளியேற்றும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா  இருந்தாலும், அந்த நாட்டை விட இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் காற்று மாசுபாடு அதிகளவில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, மூன்று நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றிருந்த  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், லண்டனில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, 2017-ம் ஆண்டு பாரிஸ் நகரில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்றது. அதில் உலக வெப்பமயமாதலை தடுக்க பல்வேறு நாடுகள்  ஒப்புக்கொண்டன. ஆனால் இந்தியா, ரஷியா, சீனா போன்ற நாடுகள் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து எந்தவித முயற்ச்சியும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும், அமெரிக்கா உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வதால் அங்கு குடிநீர் மற்றும் காற்று மிகவும் தூய்மையாக உள்ளது. ஆனால் இந்தியா, ரஷியா, சீனா போன்ற  நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் தான் குடிநீர், காற்று போன்ற இயற்கை காரணிகள் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. தூய்மை பற்றி அந்த நாடுகளுக்கு பொறுப்புணர்வு இல்லை  எனவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் தூய்மை இந்தியா போன்ற திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், தூய்மை பற்றி இந்தியாவுக்கு அக்கறை இல்லை என அமெரிக்க அதிபர் டினால்டு ட்ரம்ப் விமர்சனம்  செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : America ,world ,India ,Chancellor , America, India, purity, Chancellor Trump, Review
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...