×

டென்மார்க் நாடாளுமன்ற தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி: பிரதமராக இளம் பெண் மெட்டி பிரெடரிக்சென் தேர்வு

கோபன்ஹேகனில்: டென்மார்க்கின் முதல் இளம் பெண் பிரதமராக மெட்டி பிரெடரிக்சென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டென்மார்க்கில் 179 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பொது தேர்தல் நேற்று (05-06-2019) நடைபெற்றது. இதன் வாக்கு  எண்ணிக்கை நேற்று நடந்த நிலையில், தொடக்கம் முதலே சமூக ஜனநாயக கட்சி மற்றும் இடதுசாரிக் கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில் சமூக ஜனநாயக கட்சி மற்றும் இடதுசாரிக் கூட்டணி மொத்தமுள்ள 179 சீட்களில், 91  சீட்களை கைப்பற்றி 25.9% வாக்குகள் பெற்றது. இதனையடுத்து இந்த கூட்டணி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றிப்பெற்றுள்ள நிலையில், சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெட் பிரெடிரிக்சன் பிரதமராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான மெட் பிரெடிரிக்சன் ,முதல் இளம் பிரமதர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சிகரமான நாடு டென்மார்க்:

ஐநாவின் சார்பு நிறுவனமான Sustainable Development Solutions Network 2019ம் ஆண்டின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது. தனி நபர் வருமானம், ஆரோக்கிய வாழ்வின் அத்தியாவசிய தேவைகள், சமூக  சுதந்திரம், ஊழலின்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஃபின்லாந்து முதலிடத்திலும், டென்மார்க் இரண்டாம் இடத்தையும், நார்வே 3வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில்  ஆஸ்திரேலியா 10வது இடத்தையும், அமெரிக்கா 19வது இடத்தையும் பிடித்துள்ளன. மொத்தம் 156 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 140வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Mettie Fredericksen ,Social Democratic Party ,win ,election ,Denmark , Denmark's parliamentary election, social democratic party, winner, young lady, Mate Fredericksen
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்