ஜெர்மனியில் சுமார் 85 நோயாளிகளை கொன்ற ஆண் செவிலியருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்!

பெர்லின்: ஜெர்மனியில் சுமார் 85 நோயாளிகளை கொன்ற ஆண் செவிலியருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெர்மனியில் ஆண் செவிலியராக பணியாற்றிய நீல்ஸ் ஹோஜல், நோயாளிகளுக்கு மாரடைப்பு  ஏற்படுத்தி அவர்களை பிழைக்கச் செய்வதாக நினைத்து 85 பேரை கொலை செய்துள்ளார். இந்த தொடர் கொலையாளியின் செயல் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஓல்டென்பெர்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றங்களின் குறிப்பிட்ட நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, குற்றவாளி நீல்ஸ் ஹோஜலுக்கு(வயது 42) ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. முதல் கட்ட விசாரணையில் டெல்மெர்ன்ஹாஸ்ட் மருத்துவமனையில் 90 நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுத்தியதாகவும் அதன்பின்பு ஓல்டென்பெர்க் மருத்துவமனையில் 10 பேரை கொன்றதாகவும் கூறியுள்ளார்.

மாரடைப்பு ஏற்படுத்தி அவர்களை இவர் காப்பற்றுவது போன்ற உணர்வு இவருக்கு மகிழ்ச்சியை தந்ததாக விசாரணையின்போது கூறியுள்ளார். மொத்தம் 100 கொலைகளை செய்ய முயற்சி செய்துள்ளார். 15 கொலைகளுக்கு ஆதாரம் இல்லை எனவும் நீதிமன்ற தரப்பில் தெரிவிக்கபபட்டுள்ளது. மேலும் இறந்த நோயாளிகளை தோண்டி அவர்கள் உடலை ஆய்வு செய்தனர். 7 மாத காலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், நீல்ஸ் 43 கொலைகளை செய்ததாக உறுதியாக ஒப்புக்கொண்டார், மேலும் 5 பேரை பற்றி விவாதத்தில் ஈடுபட்டதாகவும், மீதமுள்ள 52 பேர் பற்றி தனக்கு நினைவு இல்லை என கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று நீதிமன்றத்தில் நடந்த இறுதிக்கட்ட விசாரணையின்போது, தனது கொடூர செயலுக்காக நீல்ஸ் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெர்மனியில் உலகப் போருக்கு பிறகு நடந்த மிகப்பெரிய குற்ற சம்பவமாக இது கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : nurses ,Court ,Germany , Germany, patients, murder, male nurse, life imprisonment
× RELATED நிலத்தகராறில் முதியவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை