×

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ரூ.20 லட்சம் நிதியுதவி

சென்னை: புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி நிவாரணம் வழங்கினார். இருவர் குடும்பத்துக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவியை முதல்வர் வழங்கினார்.

காஷ்மீர் புல்வாமா தாக்குதல்


கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்- ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை திடீரென வேகமாக ஓட்டி வந்து, வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதி தாக்குதல் நடத்தினான். இதில் அந்த வாகனமும், பஸ்சும் வெடித்து சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் பஸ்சில் இருந்த வீரர்கள் உடல் சிதறி பலியாகி விழுந்தனர். இந்த கொடூர தாக்குதலில் 41 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உடல் சிதறி கோரமாக பலியாயினர்.

தமிழக வீரர் இருவர் உயிரிழப்பு

இந்த தாக்குதலில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் ஆகிய 2 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் வீரமரணமடைந்தனர். சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குப்படும் என்றும் அவர்களிடம் மனைவிகளுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

நிதியுதவி வழங்கல்

இந்நிலையில் சுமார் 3 மாதங்களுக்கு பிறகு புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி நிவாரணம் வழங்கினார். சென்னை கிரீன்வேல்ஸ் இல்லத்தில் வீரர்கள் இருவர் குடும்பத்துக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவியை முதல்வர் வழங்கினார்.முன்னதாக சிவச்சந்திரனின் மனைவி காந்திமதிக்கு கிராம நிர்வாக அலுவலர் பணியும், சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கு இளநிலை உதவியாளர் பணியும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


Tags : Palanisamy ,families ,attack ,war heroes ,Kashmir Pulwama ,Tamil Nadu ,
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...