×

RTGS, NEFT ஆகிய இணையவழிப் பணப்பரிமாற்ற சேவை கட்டணங்களை நீக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

மும்பை : இணையவழிப் பணப்பரிமாற்ற முறைகளான RTGS, NEFT ஆகியவற்றிற்கான சேவை கட்டணங்களை நீக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப் பேற்ற சக்தி காந்ததாஸ் நிதி கொள்கையை இன்று அறிவித்தார். அந்த நிதி கொள்கையில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 2 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பணத்தை வங்கி அலுவல் நேரங்களில் இணையதளம் மூலம் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றுவதற்கு RTGS முறை பயன்படுத்தப்படுகிறது. முன்னதாக வங்கி வேலை நாட்களில் மாலை 4.30 மணி வரை  RTGS அனுமதிக்கப்பட்ட நிலையில், மாலை 6 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில்  RTGS,NEFT ஆகிய இணையவழிப் பணப்பரிமாற்ற சேவைக் கட்டணங்களை நீக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதன் பலனை வங்கிகள் கடைநிலை நுகர்வோருக்கு சேர்க்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ரிசர்வ் வங்கி சுட்டிக் காட்டியுள்ளது. இதனிடையே ஏடிஎம் கட்டணத்தையும் வரைமுறைப்படுத்த உள்ள ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகள் சங்கத்தில் உள்ள வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரிகளைக் கொண்டு குழு அமைக்க முடிவு எடுத்துள்ளது. அடுத்த 2 மாதங்களில் நடைபெற உள்ள கூட்டத்தில் இந்த குழுஅளிக்கும் அறிக்கையை பொருட்டு ஏடிஎம் கட்டணத்தையும் ரிசர்வ் வங்கி வரைமுறைப்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Tags : Reserve Bank , ECommerce, Cash Transfer, RTGS, NEFT, Reserve Bank
× RELATED இதுவரை இல்லாத வகையில் ஒன்றிய அரசுக்கு...