×

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி நடத்துவது குறித்து ஜூலை 16ல் இறுதி விசாரணை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்துவது குறித்து ஜூலை 16ல் இறுதி விசாரணைநடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்து.  இதையடுத்து சங்கத்தின் அன்றாட பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளரான என்.சேகரை தனி அதிகாரியாக நியமனம் செய்து தமிழக வணிகவரித்துறை உத்தரவிட்டது.

இந்த தனி அதிகாரியை நியமித்த வணிகவரித்துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு தனி அதிகாரியின் நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்ததுடன் இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.

நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சங்கத்தின் தேர்தலை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்தி முடிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு வழக்கையும் ஒன்றாக இணைத்த நீதிபதி, தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்துவது தொடர்பாக ஜூலை 16ல் இறுதி விசாரணைநடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டார்.

Tags : hearing ,judge ,Film Producers' Association Election: Court of Justice , Supreme ,Court ,Judge,, Supreme, Court ,Judge
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...