×

இரண்டாவது வெற்றி யாருக்கு? ஆஸ்திரேலியா - வெ. இண்டீஸ் இன்று பலப்பரீட்சை

நாட்டிங்காம்: நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் அரங்கில் இன்று நடைபெறும் உலக கோப்பையின் 10வது போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீசும் மோத உள்ளன. உலக கோப்பையில் இரண்டு அணிகளும் வெற்றியுடன் தொடங்கி உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் அணியையும், ஆஸ்திரேலியா அணி, ஆப்கானிஸ்தான் அணியையும் வீழ்த்திய உற்சாகத்தில் இன்று களம் காண உள்ளன.

இரண்டு அணிகளும் சரியாக 3 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஏதும் விளையாடவில்லை. கடைசியாக 2016 ஜூனில் நடைப்பெற்ற 3 நாடுகளுக்கு இடையிலான போட்டியில்தான் 2 நாடுகள் மோதியுள்ளன. இந்த அணிகள் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4ல் ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்றுள்ளது.

ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை 2 அணிகளும் மொத்தமாக 139 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 73முறையும், வெ.இண்டீஸ் 60 முறையும் வென்றுள்ளன. மேலும் 3 போட்டிகள் சரிநிகர் சமமாகவும், 3 போட்டிகள் முடிவு ஏதுமில்லாமல் முடிந்தன. அதே நேரத்தில் உலக கோப்பை போட்டிகளில் 2 அணிகளும் 9 முறை விளையாடியுள்ளன.

அவற்றில் வெ.இண்டீஸ் 5 முறையும், ஆஸ்திரேலியா 4 முறையும் வென்றுள்ளன. உலக கோப்பையை பொருத்தவரை வெ.இண்டீஸ் அணியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அதற்கு ஏற்ப இந்த முறையும் வெ.இண்டீஸ்  வீரர்கள் அசத்தலாக விளையாட தொடங்கி உள்ளனர். நியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டமாக இருந்தாலும் சரி, உலக கோப்பையில் பாகிஸ்தானுடனான ஆட்டமாக இருந்தாலும் சரி வெ.இண்டீஸ் அசத்தலான வெற்றிகளை பெற்றுள்ளது.

அந்த அணியில் கிறிஸ் கெயில்,  ஹோல்டன், லூயிஸ், நிகோலஸ், ஹோப், ரஸ்ஸல், தாமஸ், பிராத்வெய்ட் என பலரும் அற்புதமாக விளையாடி வருகின்றனர். அதேபோல் ஆஸ்திரேலிய அணியிலும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோருடன் மார்ஷ், பிஞ்ச்,  கவாஜா,  லின், ஸ்டோய்னிஸ், கம்மின்ஸ் ஆகியோரும் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர்.
 
இரண்டு அணிகளுக்கும் முதல்  வெற்றி விரைவில், எளிதில் கிடைக்க பந்து வீச்சாளர்களே முதல் காரணம். அதனால் இந்தப்போட்டியிலும் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் அணி வெற்றியை  வசப்படுத்தும். ஆக இரண்டு அணிகளும் இன்றைய போட்டியில் 2வது வெற்றிக்கு முனைப்பு காட்டுவார்கள். அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு  பஞ்சம் இருக்காது.

ஆஸ்திரேலியா
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், பேட் கம்மின்ஸ், ஜேசன் பெஹரண்டார்ப், நாதன் கோல்டர் நைல், ஆடம் ஸம்பா, நாதன் லயன்.

வெஸ்ட் இண்டீஸ்
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், கிறிஸ் கேல், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஆஷ்லி நர்ஸ், கெமார் ரோச், ஒஷேன் தாமஸ், பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷேனான் கேப்ரியல், ஷிம்ரோன் ஹெட்மயர், எவின் லூயிஸ், நிகோலஸ் பூரன், ஆந்த்ரே ரஸ்ஸல்.

Tags : Second, success, to whom? Australia, - Indies, today, is a test
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...