×

யு 20 கால்பந்து உலக கோப்பை அர்ஜென்டீனா தோல்வி

பியலா: போலாந்தில் நடைபெறும் 20 வயது உட்பட்டவர்களுக்கான கால்பந்து உலக கோப்பை போட்டியில்  6 முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டீனாவை,  ஆப்ரிக்கா அணியான மாலி எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. போலந்து நாட்டில் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 22வது உலக கோப்பை போட்டி நடைப்பெற்று வருகிறது.

இதில் போலாந்து, ஜப்பான், மெக்சிகோ, உருகுவே, நியூசிலாந்து, பிரான்ஸ், சவுதி அரபேியா, பனாமா உட்பட 24 நாடுகள் பங்கேற்றன. காலிறுதிக்கு முந்தைய தகுதி-16 சுற்றின் கடைசிப்போட்டி நேற்று முன்தினம் நடைப்பெற்றது. யு20 உலக கோப்பையில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டீனாவும், மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியும் மோதின.

பரபரப்பாக நடைபபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை, முதல்  கோலை 2வது  பாதியின் 49வது நிமிடத்தில் அர்ஜென்டீனாவின் அடோல்போ அடித்தார். பதிலுக்கு மாலியின் டயாபை 90 நிமிடத்தில் கோல் அடித்தார். அதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. அதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் அர்ஜென்டீனா வீரர்கள் மாலியின் பெனால்டி பகுதியை முற்றுகையிட்டனர்.

கோல் கம்பத்தை நோக்கிச் சென்ற பந்தை மாலியின் டயாபை தடுக்க முயல அது சுயகோலாகியது. அதனால் அர்ஜென்டீனா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால்  கூடுதல் நேரம் முடியவிருந்த நிலையில் மாலியின் பவுபகர் ஒரு கோல் அடித்ததால் ஆட்டம்  மீண்டும் சம நிலை அடைந்தது. அதன் பிறகு பெனால்டி ஷூட் வாய்ப்பு 2 அணிகளுக்கும் வழங்கப்பட்டன.

அதில் அனைத்து வாய்ப்புகளையும் கோலாக்கி அசத்தினர் மாலி வீரர்கள். அதனால் மாலி 5-4 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.  மேலும் 6முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டீனாவை வீழ்த்தி மாலி அணி 3வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியது. ஆட்டம் முழுவதும் அர்ஜென்டீனா ஆதிக்கம் செலுத்தியும் மாலியிடம் தோற்றுப் போனது. மாலி அணி நாளை இத்தாலியுடன் காலிறுதியில் மோத உள்ளது. அதேநாளில் கொலம்பியா- உக்ரைன்,  அணிகளும், நாளை மறுதினம் அமெரிக்கா-ஈகுவடார், தென் கொரியா-செனகல் ஆகிய நாடுகளும் காலியிறுதி போட்டிகளில் விளையாட உள்ளன.

Tags : Argentina ,U-20 World Cup , U20 football, world cup, Argentina, defeat
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் பைனலில் ரோகன் – எப்டன்