×

சூடான் துப்பாக்கிச்சூடு பலியான போராட்டக்காரர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

கார்டோம்: சூடானில் பலியான போராட்டக்காரர்களின் எண்ணிக்கை, 60 ஆக உயர்ந்துள்ளது. ,க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 30 ,மேலாக உமர் அல் பஷீர் அதிபராக பதவி வகித்து வந்தார். இனப்படுகொலை உள்பட பல வழக்குகளில் இவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்ததை தொடர்ந்து, அங்கு  மாபெரும் வன்முறை வெடித்தது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்த ராணுவம், ஆட்சியை கைப்பற்றியது. ,,இதனைத் தொடர்ந்து, இடைக்கால ராணுவ அரசு  அமைக்கப்பட்டு அதன் தலைவராக அப்தெல் பதா புர்கான் பொறுப்பேற்றார். ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தீவிரமடைந்து, தலைநகர் கார்தோமில் உள்ள ராணுவ தலைமையகம் முன்பு கடந்த ஒருவார காலமாக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

ராணுவம் பல முறை எச்சரிக்கை விடுத்தும் போராட்டக் குழுவினர் கலைந்து செல்லவில்லை. இதனால் கடந்த இரு தினங்களாக ராணுவம்  போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு, நடத்தியது. இதில், 40 பேர் கொல்லப்பட்டனர்.,, இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி யானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

Tags : protesters ,Sudan , dan, gunfire, killer, protesters, number
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த நடவடிக்கை...