×

‘சாரி என்கிட்ட போதுமான அளவு பணம் இருக்கு’ ரூ.405 கோடி ஊதிய உயர்வு பெற மறுத்த சுந்தர் பிச்சை

வாஷிங்டன்: ரூ.405 கோடி ஊதிய உயர்வை பெற கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான சுந்தர்பிச்சை கடந்த 2004ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். கடந்த 2015ம் ஆண்டு தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். அந்த ஆண்டு அவர் ஏற்கனவே பெற்றுவந்த ரூ.1750 கோடி மதிப்புடைய பங்குகளுடன், மேலும் ரூ.700 கோடி மதிப்புள்ள பங்குகளை நிறுவனம் அவருக்கு வழங்கியது. அதற்கு அடுத்த ஆண்டு மேலும் ரூ.1400 கோடி மதிப்புள்ள பங்குகளை பெற்றார்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் முதன்மை அமைப்பான ஆல்பாபெட், கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டுக்கான பங்காக சுந்தர்பிச்சைக்கு ரூ.405 ேகாடி மதிப்புள்ள பங்குகளை அளிக்க முன்வந்தது. ஆனால் அவர் அந்த பங்குகளை பெற மறுத்துவிட்டார். மேலும் தன்னிடம் போதுமான பணம் இருப்பதால் ஊதிய உயர்வாக வழங்கப்படும் பங்குகள் தனக்கு வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு அதிகளவில் சம்பளம் வழங்கப்படுவதாக அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் கேள்வி எழுப்பியதை தொடர்ந்தே அவர் சம்பள உயர்வை பெற மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆல்பாபெட் நிறுவன நிர்வாகி ஒருவர் கூறுகையில், சிலிக்கான்வேலியில் அதிக சம்பளம் பெறும் தலைமை செயல் அதிகாரிகளில் முதன்மையானவர் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனத்தை திறமையாகவும், புத்திசாலித்தனமாகவும் நடத்தி வருகிறார்.

அவர் தனது பணியில் எப்போதும் நிகழ்காலத்துக்கு ஏற்ற தகவல்களுடன் இருப்பார்’ என்றார். கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்ற விதி உள்ளதால் சுந்தர் பிச்சை ஊதிய உயர்வு பிரச்னை தொடர்பான எந்த தகவலையும் கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

உலகளாவிய தலைமை பதவிக்கான விருது:
உலகளாவிய தலைமை பதவிக்கான விருதுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக் தலைவர் அடேனா பிரைட்மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை உள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர், உலகளாவிய நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்று தமிழக மாணவர்களுக்கு உத்வேகம் தரும் முன்னுதாரணமாக சுந்தர் பிச்சை திகழ்கிறார். தற்போது அவருக்கு 46 வயது ஆகிறது.

இதுபோல் அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக் தலைவர் அடேனா பிரைட்மேன் (50). இவர்கள் இவரும் உலகளாவிய தலைமை பதவிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் இவர்களை தேர்வு செய்துள்ளது. அடுத்த வாரம் நடைபெறும் இந்தியா ஐடியாஸ் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில், கடந்த 2007ம் ஆண்டில் இருந்து இந்த விருதுகளை வழங்கி வருகிறது. அமெரிக்கா - இந்திய வர்த்தக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் நிறுவனங்களின் உயர் பதவியில் உள்ளவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தொழில்நுட்பத்துறையில் இந்த நிறுவனங்களின் பங்களிப்பை பாராட்டி மேற்கண்ட விருது வழங்கப்படுகிறது.

சுந்தர் பிச்சைக்கு கிடைத்துள்ள இந்த விருது, இந்தியாவுக்கு மட்டுமின்றி தமிழருக்கு கிடைத்த உலகளாவிய கவுரவமாகவும், பெருமைக்குரியதாகவும் பார்க்கப்படுகிறது. சுந்தர் பிச்சை தலைமைப்பொறுப்பு ஏற்ற பிறகு, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு உதவியாக இருந்ததோடு பல லட்சம் இந்தியர்களுக்கு தொழில்நுட்பத்தை கொண்டு சேர்த்துள்ளது  என அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் தலைவர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.



Tags : Sunder Bhik , 'Waiting for money, there is money,' Rs 405 crores begging bid
× RELATED அர்ஜெண்டினாவில் அரசு...