புதுகை கலெக்டரின் நேர்முக உதவியாளர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பொய்யாமொழி. இவர், அத்துறையில் முறைகேடு செய்ததாகவும் மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு செய்ததாக புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் உதவித் திட்ட அலுவலராக பணிபுரிந்த பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இதேபோன்று, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலையை கலெக்டர் உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்தார். இது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

× RELATED விடுதி வார்டன் சஸ்பெண்ட் கண்டித்து...