துப்பாக்கியுடன் திரிந்த விவசாயி கைது

சேந்தமங்கலம்: நாமக்கல்  மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில், அனுமதி  பெறாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்துக்கொண்டு, சிலர் வனவிலங்குகளை  வேட்டையாடி வருவதாக, சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இதையடுத்து  போலீசார், நேற்று காலை,  காரவள்ளி ஒட்டியுள்ள விளாங்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது  அவ்வழியாக கையில் நாட்டுத்துப்பாக்கியுடன் வந்த ஒருவரை, போலீசார் மடக்கி  பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், விவசாயி தங்கராசு(48) என்பது தெரியவந்தது. மேலும், உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி என்பதால் பறிமுதல் செய்து தங்கராஜை கைது செய்தனர்.

Tags : Gun, farmer, arrested
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி