×

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் போலி சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேர்ந்த பெண் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிந்தகம்பள்ளியை சேர்ந்த முனிராஜ் மகள் ரமணி(38). இவர், கடந்த 2012ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக சேர்ந்தார். பின்னர், அவரிடம் கல்வி சான்றிதழை கேட்டுள்ளனர். அவரும் கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளார். அதிகாரிகள், அந்த  சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது, போலி என தெரியவந்தது. போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த ரமணி மீது, கடந்த  மாதம் 25ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர் ராமமூர்த்தி, மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்கை மாவட்ட  குற்றத் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றி விசாரணை நடத்த எஸ்பி  உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றத் தடுப்பு போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது உறுதியானதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம்  ரமணியை கைது செய்தனர். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். போலி சான்றிதழை கொண்டு வேலைக்கு சேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : workshop ,collector ,Krishnagiri ,office , Krishnagiri, collector's office, duplicate certificate, woman arrested
× RELATED பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம் காலை 7 மணிக்கு மாற்றம்