×

அதிசயம், ஆனால் உண்மை பாக். ராணுவம் சிக்கன நடவடிக்கை பட்ஜெட் நிதியை குறைக்க முடிவு

இஸ்லாமாபாத்: பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான செலவினங்களை தானாக முன்வந்து குறைக்க பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற நாள் முதல் இம்ரான் கான் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசு மாளிகையை புறக்கணித்து, மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டில் ராணுவ செயலர், 2 பணியாட்களுடன் மட்டும் வசித்து வருகிறார். இதனிடையே, பிரதமரின் தகவல் தொடர்பு சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் அவான், `ஜூன் 11ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்’ என்று கடந்த 28ம் தேதி அறிவித்தார். மக்கள், ராணுவ அமைப்புகள் 2019-20 நிதியாண்டின் சிக்கன நடவடிக்கைக்கு பங்களிக்கும்படி அரசு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், ராணுவ ஊடகப் பிரிவின் பொது சேவை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் நேற்றைய தனது டிவிட்டர் பதிவில், `‘அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான செலவினங்களை குறைக்க ராணுவம் முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த சிக்கன நடவடிக்கை, தளவாடங்கள், பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அல்ல. மாறாக, நிர்வாகம், உள்ளீட்டு செலவினங்களில் மேற்ெகாள்ளப்படும்’’ என்று கூறியுள்ளார். ஆனால் எவ்வளவு தொகை குறைப்பு என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இதற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார். `பாதுகாப்பு தொடர்பான பல சவால்களை எதிர் கொண்டு வரும் நிலையிலும், முன்னெப்போதும் இல்லாத வகையில், ராணுவம் தானாக முன்வந்து பாதுகாப்பு செலவினங்களை குறைப்பதாக கூறியுள்ளதுபாராட்டுக்குரியது’’ என்று கூறியுள்ளார்.

Tags : Pak. Military, austerity, budget finance,
× RELATED இங்கிலாந்து நீர்வீழ்ச்சியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி