4 நாட்களுக்கு பின் சென்றும் மீன்கள் சிக்காததால் வேதை மீனவர்கள் வேதனை

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் கடந்த நான்கு நாட்களாக கடும் சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக நான்கு நாட்கள்  மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.  இதனால் மீன்வரத்து முற்றிலும் குறைந்தது. கடலில் காற்று குறைந்ததால்  நான்கு நாட்களுக்கு பிறகு 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள்  நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
 
அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்யோடு மீனவர்கள் சென்றனர்.  ஆனால் எதிர்பார்த்ததைவிட குறைந்த மீன்களே சிக்கியது..  இதனால் மீனவர்கள் கவலையுடன்  மாலையில் கரை திரும்பினர். வழக்கமாக சூறைக்காற்றுக்கு பின்னர் கடலுக்கு சென்றால் மீன்கள் அதிகம் கிடைக்கும் ஆனால் நேற்று பல மணி நேரம் முயன்றும்,  டீசல் செலவுக்கு கூட மீன்கள் கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

Tags : fishermen , Fish, fishermen, pain
× RELATED ஓமன் நாட்டில் உயிரிழந்த மீனவர்களின்...