×

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ராணுவமே வந்தாலும் தடுப்போம்: முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ராணுவே வந்ததாலும் தடுத்து நிறுத்துவோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  ஆவேசத்துடன் கூறினார். விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம்  கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் நடந்தது. இதில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: மத்திய அரசு எந்தவொரு திட்டத்தை அறிவித்தாலும்  மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது. புதுச்சேரியில் ைஹட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு  நினைத்தால் நாங்கள் போராடி எதிர்ப்போம். புதுச்சேரியில் ராணுவத்தை நிறுத்தினாலும் நாங்கள் அஞ்சமாட்டோம்.

 அதற்காக எங்கள் ஆட்சியே கலைந்தாலும் கவலைப்படமாட்டோம். மத்திய அரசு தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது.  அதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துணை போகிறார்கள். நாங்கள் என்றும் மக்களுடன் இணைந்து போராட தயாராக  இருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ‘’ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  செயல்படுத்தினால் உலகின் சிறந்த சமவெளியான டெல்டா பகுதிகள் நாசமாக போகும். இந்த திட்டத்தால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். இது  மக்களின் வாழ்வாதார பிரச்னை. புதுச்சேரியில் போராட்டம் நடத்தினாலும் நாங்கள் வந்து இணைந்து கொள்வோம்’’என்றார்.

Tags : Narayanasamy ,army , Hydro Carbon Project, Army, Chief Minister Narayanasamy, Angad
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை