×

அனிதாவை தொடர்ந்து ரிதுஸ்ரீ: நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர்: நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகம் உள்பட அனைத்து  மாநிலங்களிலும் மருத்துவமுறை படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிபெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு  தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. பானி புயலால் பாதிக்கப்பட்ட  ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 20-ம் தேதி நடைபெற்றது. நடப்பு ஆணடுக்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வை இந்தியா முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  எழுதினர். இதில் தமிழ் நாட்டில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.  இந்த தேர்வு முடிவுகள் www.nta.ac.in , www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில்  கடந்த ஆண்டை விட 9.01% மாணவ, மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்து ஸ்ருதி  என்ற மாணவி அகில இந்திய அளவில் 57-வது இடமும், தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த நலின்  கந்தேல்வால் என்ற மாணவர் 701 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். மாற்றுத்திறனாக்கள் பிரிவில்  தமிழகத்தின் கார்வண்ணப்பிரபு 575 மதிப்பெண் எடுத்து 5 -வது இடத்தை பிடித்தார்.

இதற்கிடையே, ரிதுஸ்ரீ என்ற திருப்பூர் மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மாணவி ரிதுஸ்ரீ  490 மதிப்பெண் எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவப்படிப்பு செய்வதற்கான நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் 12-ம் வகுப்பில் அதிகமதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி தற்கொலை செய்து கொண்டதால் பெற்றோர் அதிரிச்சியடைந்துள்ளனர். நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அனிதாவை தொடர்ந்து ரிதுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Rudu Suryi ,Tirupur ,suicide ,Anita , Anita, Neet Selection, Tirupur student Rudu Suresh, committed suicide
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்