பிரபல நடிகருடன் நடிக்க வைக்க படுக்கைக்கு அழைத்த இயக்குனர்: சிவகார்த்திகேயன் பட நடிகை மீடூ புகார்

சென்னை: பிரபல நடிகருடன் நடிக்க வேண்டுமென்றால் படுக்கையை பகிர வேண்டும் என்று கேட்டதாக இயக்குனர்மீது புகார் கூறியிருக்கிறார் நடிகை  ஷாலு ஷம்மு.சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற  படங்களில் நடித்திருப்பவர் ஷாலு ஷம்மு.  விஜய்தேவரகொண்டா படத்தில் நடிக்க வேண்டுமென்றால் தன்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என்று இயக்குனர் ஒருவர் கேட்டதாக மீடூ புகார்  கூறியிருக்கிறார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ள ஷாலு,’ மீடூ பாதிப்புக்குள்ளான நடிகைகளில் நானும் ஒருவர். ஆனால் அதை ஒரு புகாராக  சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் வளர்ந்த பெண்ணாக இத்தகைய சூழலை நானே சமாளிக்க முடியும் என்று எண்ணினேன். ஒருவேளை நான்  புகார் கூறினால் மட்டும் என்ன பயன்? யார் மீது புகார் சொல்கிறேனோ அவர் அதை மனப்பூர்வமாக ஏற்கப்போவதில்லையே.. சமீபத்தில் பிரபல  இயக்குனர் ஒருவர் விஜய தேவரகொண்டா படத்தில் நான் நடிக்க வேண்டுமென்றால் தன்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என்று கேட்டார்’ என  குறிப்பிட்டுள்ளார்.

Tags : film actress ,actor ,Sivakarthikeyan , Actor, bed, actress Shalu Shammu, Sivakarthikeyan, actress complains complaint
× RELATED திருப்புவனம் அருகே முள் படுக்கையில் படுத்து பெண் சாமியார் அருள்வாக்கு