×

துறைமுகம் தொகுதியில் குடிநீர் தொட்டிகள் திறப்பு: தயாநிதி மாறன் எம்பி பங்கேற்பு

பாரிமுனை: தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும்,  நீர்நிலைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
சென்னை துறைமுகம் ெதாகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையை போக்க, துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி  ஒதுக்கப்பட்டு, 20 இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் குடிநீர் வழங்கும்  விழா இன்று காலை துறைமுகம் தொகுதியில் நடைபெற்றது.இவ்விழாவுக்கு மாவட்ட செயலாளரும் துறைமுகம் தொகுதி எம்எல்ஏவுமான  பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்து, அப்பகுதி  மக்களுக்கு பிளாஸ்டிக் குடங்களை வழங்கினார்.

இதையடுத்து, 56வது வட்டம் மதுரை வாசன் தெரு, 55வது வட்டம் ஆனைக்காரன் கோனார் தெரு, 54வது வட்டம், பெருமாள் கோயில் கார்டன் தெரு,  அண்ணா பிள்ளை தெரு ஆகிய 4 இடங்களில் பிளாஸ்டிக் குடங்களை வழங்கி, சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் திறந்து வைக்கப்பட்டன.
முதல் கட்டமாக 4 இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி நிறுவப்பட்டு உள்ளது. துறைமுகம் ெதாகுதிக்கு உட்பட்ட பிராட்வே, தங்கசாலை,  ஏழுகிணறு, துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் இப்பகுதி  மக்களுக்கு நாள்தோறும் இலவசமாக குடிநீர் வழங்கப்படும்.

தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கையை, திமுகவின் தொகுதி எம்எல்ஏவும் நாடாளுமன்ற உறுப்பினரும் இவ்விஷயத்தை கையில் எடுத்து  சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலரும்  வழக்கறிஞருமான போஸ், பகுதி செயலாளர்கள் முரளி, ராஜசேகர், அபரஞ்சி, விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : constituency ,Dayanidhi Maran , Harbor batch, drinking water troughs, Dayanidhi Maran MB
× RELATED எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...